Latest news: பொதுப்போக்குவரத்தில் பெண்களிடம் சேட்டை! பிடிக்க சிவில் காவற்துறை!
tamil news: இலங்கையில் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பெண்களிடம் தகாத முறையில் நடந்துக் கொள்பவர்களுக்கு எதிராக தற்சமயம் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட நடவடிக்கை இன்று(08.02.2024) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி காவற்துறை மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதாவது இரகசியமான முறையில் கமரா பொறுத்தப்பட்ட சிவில் காவற்துறை உத்தியோதகத்தர்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் காவற்துறை மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்களுக்கு பொது போக்குவரத்துகளில் இடையூறு ஏற்படுத்துவோர் தொடர்பில் அறிவிப்பதற்கு 109 எனும் அவசர இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*