வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latet news: பணிப்பெண்கள் அனுப்புவது நிறுத்தம்! பரிசீலிக்கின்றது இலங்கை.


tamil news: இலங்கைப் பெண்களை வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான முன்மொழிவுகளையும், திட்டங்களையும் சமர்ப்பிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகத்திடம் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று(21.02.2024) வலியுறுத்தியுள்ளார்.


அதாவது, பெண்களை வீட்டுப் பணியாளர்களாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் நடைமுறையை நிறுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், அதற்குப் பதிலாக அதிக ஊதியம் பெறும் திறமையான வகைப் பணிகளில் வெளிநாட்டு வேலைகளைத் தேட பெண்களை ஊக்குவிக்க வேண்டும் என முன்மொழிந்துள்hர்.


இன்று(21.02.2024) உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் சங்க உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இது தொடர்பான முன்மொழிவுகளில் அனைத்து பங்குதாரர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இனிவரும் 10 ஆண்டுகக்குள் வீட்டுவேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களை முற்றாக நிறுத்துவதும், அதற்குப் பதிலாக அவர்கள் திறமையான பிரிவுகளில் வேலை தேடுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதும் இலக்காக இருக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*