வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 10,000 ஜனாதிபதி அறிவிப்பு!!


𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 10,000 சம்பளம் அதிகரிக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். 


அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வை பத்து வருடங்களில் வழங்க திட்டமிடப்பட்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2024ம் ஆண்டு அதனை வழங்க முடிவு செய்தோம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


அதன் அடிப்படையில் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார் . 



நேற்று(29.02.2024) மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில்  நடைபெற்ற “அஸ்வெசும” வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அரச ஊழியர் சம்பள பிரச்சினை மற்றும் மக்கள் காணி பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார்.


மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி  நாட்டை பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில், “அஸ்வெசும” திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.



அதன் அடிப்படையில் "அஸ்வெசும" மூலம் சமூர்தித் திட்டத்தை விட மூன்று மடங்கு உதவிகளை மக்களுக்கு வழங்க முடிந்தது.


இதன்படி, அஸ்வெசும நிவாரணம் தேவைப்படும் அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்குவதே எமது நோக்கமாகும் என கூறியிருந்தார்.


மற்றும் நம் நாட்டில் சுமார் 16 இலட்சம் சமூர்த்திப் பயனாளிகள் இருந்தனர். 


குறித்த நிவாரணப் பயனாளிகளின் எண்ணிக்கையை 24 இலட்சமாக உயர்த்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.



மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி  ‘உறுமய’ திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.


1935 ஆம் ஆண்டு முதல் காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் காணி உரித்து பெற்ற அனைவருக்கும் ‘உறுமய’ திட்டத்தின் கீழ் முழுமையான காணி உரிமையைப் பெறுவர்.


அதன் படி சட்டப்பூர்வ உரிமை கிடைப்பதால், மக்கள் நீண்டகாலமாக சந்தித்து வந்த பிரச்சினை தீரும்.


உறுமய திட்டத்தின் கீழ் 20 இலட்சம் பேருக்கு நிரந்தர காணி உறுதிகள் வழங்கப்படுகின்றன.


இந்த ஆண்டு இறுதிக்குள் பத்து இலட்சம் காணி உறுதிகள் வழங்கப்படும் என கருத்து தெரிவித்தார். 


மக்களுக்குப் பாதுகாப்பான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும் என்றும், "அஸ்வெசும" மற்றும் "உறுமய" வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், பிரதேச செயலகங்களுக்கு அதிகளவான பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்..


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*