வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : இ.போ.ச பேருந்து மோதி பாடசாலை மாணவன் உயிரிழைப்பு!!


𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : இன்று காலை மீசாலை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர  விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, பாடசாலையில் தனது விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு சைக்கிளில் (cycle)  வீடு திரும்பிய மாணவனை மோதியதில்  படுகாயமடைந்த மாணவன்  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு  அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்தில் மாணவன் பயணித்த துவிச்சக்கரவண்டி பல துண்டுகளாக சிதறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


விபத்திற்கு காரணமாக இருந்த பேருந்து சாரதியை கைது செய்த சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


குறித்த விபத்தில் மீசாலை கிழக்கைச் சேர்ந்த 18வயதான சிவநாவலன் பரணிதரன் என்ற மாணவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாட்டில் தற்போதைய காலப்பகுதியில் அதிகமான வீதி விபத்துக்களை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளே ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது..


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*