𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : இன்று நள்ளிரவு முதல், எரிபொருள் விலை குறைப்பு!!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : இன்று திங்கள் (04) நள்ளிரவு முதல் நாட்டில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மற்றும் எவ்வாறாயினும், இன்று எரிபொருள் விலையில் பெரியளவு மாற்றம் ஏற்படாது எனவும் மற்றும் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் கடந்த தை மாதம் 31 ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு, ஒக்டேன் 92 பெட்ரோல், ஒக்டேன் 95 பெட்ரோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் ஜனாதிபதி "ரணில் விக்ரமசிங்கவினால்" வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது மின்சார விநியோகம், பெட்ரோலியப் பொருட்கள், எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகத்துடன் தொடர்பான அனைத்து சேவைகளையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
அதன் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய நேற்று(03.03.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் "சமன் ஏக்கநாயக்கவினால்" இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகஸ்தர்களின் மாதாந்த தள்ளுபடி பணத்திலிருந்து 35 % சத வீத பாவனை கட்டணத்தை அறவிடப் போவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறு செயற்பட்டால் விநியோக நடவடிக்கைகளுக்கு அன்றாட செலவுகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்படும் என சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துளார்.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*