Latest news: வைத்தியர்களுக்கு முகநூலில் அவதூறு! யாழ் நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை
tamil news: வைத்தியர்களுக்கு முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட யாழ் உரும்பிராயைச் சேர்ந்த ரகுராம் என்பவரை மன்னிப்பு கேட்குமாறு யாழ் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இவ்வாறான செயற்பாடுகளில் இனிமேல் இடம்பெறக்கூடாது என எச்சரிக்கையும் விடுத்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தைச் சேர்ந்த ரகுராம் என்னும் குறித்த நபர் தன்னை ஒரு வைத்தியராக காண்பித்து ஏனைய வைத்தியமுறைகள் தொடர்பிலும், வைத்தியர்கள் தொடர்பிலும் முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் காணொளிகளை பதிவேற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபருக்கு எதிராக தற்போது சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரவணன் யாழ்ப்பாணம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம்(28.02.2024) புதன்கிழமை வழக்குவிசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த நபரை தனது தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தவுடன் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்து வழக்கிலிருந்து விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*