Latest news: உள்ளூர் வளங்களை அழிக்காதே! புங்குடுதீவில் போராட்டம்
tamil news: உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் இன்றையதினம்(05.03.2024) புங்குடுதீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
அதாவது, தீவகம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் புங்குடுதீவு மடத்துவெளிப் பிரதேசத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாராம்பரிய மீன்பிடி தொழிலை அழிக்காதே, சாராயம் குடிப்பதற்கு மண் வளத்தை அழிக்காதே, தொழிலாளர்களுக்கே மீன்பிடி அமைச்சு; முதாலாளிமார்களுக்கு அல்ல என சுலோகங்கள் தாங்கிய அட்டைகளுடன் போராட்டத்தில் மக்க் ஈடுபட்டனர்.
மேலும் இப்போராட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஸ் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*