Latest news: யாழ்ப்பாணத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலை!
tamil news: யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் கோவிலுக்கு பின்பகுதியில் உள்ள அரசமரத்தின் கீழ் புத்தர் சிலையொன்றினை இன்றையதினம்(05.03.2024) அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
இதனையடுத்து அதிருப்தியடைந்த மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று குழுமி வருகின்றனர்.
நேற்று முன்தினம்(03.05.2024) குறித்த சம்பவம் இடம்டபெற்றிருப்பதாகவும், அந்த பகுதியிலுள்ள சிங்கள கடற்படையினரே இதனை செய்துள்ளதாகவும் சந்தேகம் வெளியிட்ட மக்கள்,
குறித்த அத்துமீறல் குறித்து சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுவரும் நிலையில் கடந்த 3 நாட்களாக போராளி சாந்தன் அவர்களின் இறப்பு தொடர்பில் துக்கதினங்களாக கடைப்பிடித்து வந்த நிலையில் குறித்த அத்துமீறல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*