வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latest news: வெடுக்குநாறி கோவிலில் சிவராத்திரியை நிறுத்துமாறு சிங்கள பிக்குகள் காவல்துறையிடம் கோரிக்கை!


tamil news: வெடுக்குநாறி ஆதி சிவன் கோவிலின் மகா சிவராத்திரி விழாவை இந்த வாரம் நிறுத்துமாறு இலங்கை காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அதனை சீர்குலைக்க சிங்கள பௌத்த பிக்குகள் திட்டமிட்டுள்ளனர்.


இலங்கையில் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு களனியில் உள்ள பௌத்த தகவல் மையத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்திலேயே இந்த வாரம் நடைபெறவிருக்கும் சைவ சமயச் சடங்குகளை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ளது.



'வெடுக்குநாறி ஆதி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன' என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி(TNPF) உறுப்பினர் T தவபாலன் இந்த வார தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.


குருந்தூர்மலை, வெடுக்குநாரி என்று பாராமல் எங்கள் வழிபாட்டு உரிமைக்காக எங்கள் தாயகத்தில் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.


சிங்கள பௌத்த துறவி ஒருவர் மகா சிவராத்திரிக்கு முன்னதாக வெடுக்குநாறி பிரதேசத்தை ஆக்கிரமித்து விழாக்களை சீர்குலைக்கும் திட்டங்களுடன் தனது சமூக ஊடக தளங்களில் 'பொது நோக்கத்திற்காக அணிதிரளுமாறு' மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்து;ளார்.


சிங்கள பௌத்த பேரின சிந்தனை கொண்ட தலைவர்கள் தமிழர்களின் அவலத்திற்கு முன்னுரிமை கொடுக்க மாட்டார்கள் என்றும் அடக்குமுறை முடிவுகளுக்கு எதிராக சாதாரண குடிமக்கள் தான் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.


சில வாரங்களுக்கு முன்னர், வவுனியாவில் உள்ள வெடுக்குநாரி ஆதி சிவன் கோவிலுக்கு இலங்கை இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட இனந்தெரியாத குழு அந்த இடம் தங்களுக்குரியது என்று மீண்டும் கூறி தமிழர்களுக்கு எச்சரிக்கையும் விடுவித்துள்ளனர்.



உழவு இயந்திரத்தில் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டதுடன் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வெடுக்குநாறி பிரதேசத்தில் வழிபாடு செய்வோருக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என காவல்துறையினர் உட்பட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலேயே இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.


இதனிடையேஇ வெடுக்குநாறி ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி பூஜையின் போது ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்க கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.


நிர்வாகம் ஏற்கனவே ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டதாகவும், அந்தி சாயும் போது அப்பகுதியை ஒளிரச் செய்ய ஜெனரேட்டரைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.


இலங்கை காவல்துறையிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வராத நிலையில், திருவிழாவை முன்னெடுப்பதற்கு இலங்கை அனுமதி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறிதான் போலும்?


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*