Latest news: இளைஞரை பலியெடுத்த வீதியில் மீண்டுமொரு கோரவிபத்து!
tamil news: நல்லூர் கோவிலுக்கு முன்பகுதியில் சீமெந்து லொறி ஒன்று கடை கட்டடத்தை உடைத்துச் சென்றுள்ளது.
அதாவது,
இன்று(07.03.2024) காலை 10.20 மணியளவில் பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றும் லொறி ஒன்று நல்லூர் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடை கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் கடையும் முழுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் சில வாரங்களுக்கு முன்பு பேரூந்திலிருந்து இறங்க முற்பட்ட இளைஞர் இறந்த அதே இடத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் லொறியின் சாரதி காயங்களுடன் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Page*
*Instagram*
*WhatsApp group*
*Twitter*
Labels:
உள்நாட்டுச் செய்திகள்