ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக 2 CID உத்தியோகத்தர்கள் கைது!
tamil news: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்(CID) கடமையாற்றும் 2 கான்ஸ்டபிள்கள் ஐஸ்(methamphetamine) வைத்திருந்த குற்றச்சாட்டில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பிறிதொரு ஊடகம் தெரிவித்துள்ளது.
அதாவது, கொம்பனி வீதியிலுள்ள குமரன் இரத்தினம் தெருவில் மதுபானசாலைக்கு அருகில் 130mg ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த அதிகாரிகளை கொம்பனி வீதி காவற்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் கான்ஸ்டபிள்களாக கடமையாற்றுவது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, போதைப்பொருள் வைத்திருந்த நபருடன் இருந்த மற்றைய கான்ஸ்டபிள் போதைப்பொருளுக்கு அடிமையானவரா என்பதை அறிய நீதித்துறை வைத்திய அதிகாரியிடம் அறிக்கை கோரவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.