நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 33,960 பேர் பாதிப்பு!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் தற்போது 8,944 குடும்பங்களைச் சேர்ந்த 33,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழன் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கடும் மழை மற்றும் காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்த சம்பவம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தத்தினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மேல் மாகாணத்திலேயே அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அதற்கமைய மேல் மாகாணத்தில் 4,814 குடும்பங்களைச் சேர்ந்த 19,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்