பனைக்கு திருவிழா எடுத்த தமிழர்கள்!
tamil news: பனைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் பனைத்திருவிழா நேற்றைய தினம்(26.05.2024) யாழ்ப்பாணம் பொன்னாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அழிந்துவரும் பனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், இளந்தலைமுறையினருக்கும் பனைக் கலாச்சாரத்தைக் கடத்துதல், பனைகளிலிருந்தான பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் பனம் உற்பத்திகளை சர்வதேச தரத்தில் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு இளைஞர்கள் தலைமையில் சுயமாக ஒன்றிணைந்துள்ளனர்.
இதன்போது பதநீர், நுங்கு, கூல் போன்ற பனைசார் உணவுகள் பரிமாறப்பட்டதுடன், இயந்திரம் மூலம் பனை ஏறுவது மற்றும் வீதிநாடகம் ஆகியன இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள், அரசியல் பிரமுகர் என பலதரப்பட்டோர் கலந்துகொண்டனர்.
சில ஆண்டுகளாக வவுனியாவில் இடம்பெற்று வந்த பனைத்திருவிழா இந்ந ஆண்டு யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.