சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்த விகாரையை கண்டித்து தையிட்டியில் தமிழர்கள் போராட்டம்!
tamil news: யாழ்ப்பாணம் தையிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திஸ்ஸராஜ விகாரை பௌத்த விகாரையின் முன் அத்துமீறி உள்ள காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு கோரி தமிழர்கள் ஒன்றுகூடி போராடியுள்ளனர்.
சட்டவிரோத கட்டுமானத்தை சூழ்ந்துள்ள 14 தமிழ் குடும்பங்களுக்கு சொந்தமான காணியை மீள வழங்குமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி(TNPF) கோரிக்கை விடுத்துள்ள நிலையில் குடியிருப்பாளர்கள் இணைந்து கொண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் கனகரத்தினம் சுகாஷ்,
தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் இந்த புத்த கோவிலை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்றார்.
"அடுத்த 3 நாட்களுக்கு அனைத்து வயதினரும், அனைத்துத் தரப்பு மக்களும் இங்கு வந்து புத்த கோவிலை அகற்றும் வரை தங்கள் எதிர்ப்பைக் காட்டுவார்கள்"
என்று அவர் கூறினார்.
"நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் தாய்நாட்டின் அன்பிற்காக இங்கு கூடியுள்ளனர், எனவே சர்வதேச சமூகத்திற்கு அவர்களின் செய்தி தெளிவாக உள்ளது.
இந்த கோவிலை இங்கிருந்து அகற்ற வேண்டும்."
எனவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து, அந்த பகுதிக்கு பொதுமக்கள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கை காவல்துறையினர் விகாரையை சுற்றி தடுப்புகளை அமைத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறும், சட்டவிரோத கட்டிடங்களை நிறுத்தக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
திஸ்ஸ ரஜமஹா விகாரை அமைந்துள்ள தனியார் காணியை விகாரைக்கு மாற்றுவதை கட்டாயமாக்கி, 'தேசிய பாதுகாப்பு' தொடர்பான இலங்கை மேற்பார்வைக் குழு அண்மையில் உத்தரவு பிறப்பித்ததுடன், சொத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மாற்றுக் காணி ஒதுக்கீடுகளையும் பரிந்துரைத்தது.
கோவிலுக்கு நிலம் மாற்றவும், மாற்று நிலங்கள் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தில் 'சிங்களமயமாக்கல்' செயல்முறையை முடுக்கிவிட்டு, வடகிழக்கு முழுவதும் பௌத்த கட்டமைப்புகளை இலங்கை அரசு தொடர்ந்து நிர்மாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.