நாட்டில் முற்றாக தடை செய்யப்படவுள்ள லஞ்ச் சீட் பயன்பாடு!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : 2025 ஆம் ஆண்டு முதல் லஞ்ச் சீட்டை (lunch sheet) முற்றாகத் தடை செய்வது தொடர்பில் இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துவருகின்றது.
அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு (2025) முதல் லஞ்ச் சீட் உற்பத்தி மற்றும் இறக்குமதி மற்றும் விற்பனையை முற்றாக தடை செய்வது தொடர்பான சட்டப் பணிகளை நாட்டின் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை மேற்கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயக தலைவர் ஹேமந்த ஜயசிங்க மேலும் தெரிவித்தாவது, இவ் சட்டத்திற்கு அமைய லஞ்ச் சீட்களை (Lunch Sheet ) உற்பத்தி செய்துவதும், இறக்குமதி செய்வதும் முற்றாக தடை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்