ரணில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம்! ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்.
tamil news: ரணில் அவர்களின் வடக்கு பிராந்தியத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம்(19.05.2024) நடைபெற்றது.
வடக்கு பிராந்திய ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றதுடன், பாதுகாப்பு பிரிவினர், காவற்துறை, மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டனர்.
மேலும் ஜனாதிபதி அவர்களால் வடக்கு பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், திட்டங்களுக்கு பொறுப்பான துறைசார் அதிகாரிகளின் கடமைகள், பாதுகாப்பு நடைமுறைகள், நிகழ்ச்சி நிரல் திட்டமிடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்