முதன்முறையாக நேற்று 1700ரூபா சம்பளம் பெற்ற தோட்டத்தொழிலாளர்கள்!!!
tamil news: எல்கடுவ plantaions நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களின் தொழிலாளர்களுக்கு நேற்று(10.06.2024) முதன்முறையாக 1700ரூபா சம்பளம் வழங்கப்படவுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் அரசாங்கத்தினால் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை 1,700.00 ஆக உயர்த்த வேண்டும் என்ற வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு பெருந்தோட்ட நிறுவனங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்திருந்ததுடன் வழக்கும் தொடர்ந்த நிலையில் மாத்தளையிலுள்ள எல்கடுவ plantaions நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று 1,700.00 சம்பளம் பெறவுள்ளனர்.
மேலும் பெருந்தோட்ட ஊழியர்களுக்கு முதன்முதலாக 1,000.00 சம்பளம் கொடுத்த நிறுவனமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்