வாக்காளர் எண்ணிக்கை 2 இலட்சத்தினால் அதிகரிப்பு!
tamil news: கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வாக்காளர் எண்ணிக்கை 2 இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை 2024ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வருகின்ற ஜூலை மாதம் 15ம் திகதி இறுதி பட்டியல் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில் 2023ம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 2 இலட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானிப்பதற்கான அதிகாரம் அடுத்த மாதம் 17ம் திகதியின் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி ஜுலை மாத இறுதியில் ஜனாதிபதி தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் அநேகமாக வெளியிடப்படும் என தென்பகுதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.