இலங்கையின் வறுமை விகிதம் 2 மடங்கானது!!!
tamil news: இலங்கை அரசு கடைப்பிடிக்கும் பொருளாதார கட்டுப்பாடுகளின் பாதகமான விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கருத்து தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் பூகோள ரீதியிலான நிலைமை அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போது அவர் இலங்கையின் வறுமை விகிதம் 2 மடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அதனுடன் தொடர்புடைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் ஏழ்மையான மற்றும் வறுமை கோட்டிலுள்ள மக்களை அதிகம் பாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதாவது இலங்கையில் 2021 மற்றும் 2023 இற்குமிடையில் வறுமை விகிதம் 13.1% இலிருந்து 25.9% வரை இரட்டிப்பாகியுள்ளது.
மேலும் இவ்வாறான நிலை அடுத்த சில ஆண்டுகளுக்கு இதே மட்டங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.