40 ஆண்டுகளின் பின் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி!
tamil news: ஆனைக்கோட்டை பகுதியில் 1980ம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்களான இரகுபதி மற்றும் இந்திரபாலா ஆகியோர் முன்னெடுத்த தொல்பொருள் அகழ்வாய்வு மீண்டும் 40 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று(20.06.2024) ஆரம்பமாகியுள்ளது.
புலம்பெயர் நிதிப்பங்களிப்புடனும், யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடனும் அதன் தலைவர் யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் ஆனைக்கோட்டையில் பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கக்கூடிய சான்றுகளை தேடும் வகையில் காலை 9.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா,
பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவஐயர்,
யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்று துறைத்தலைவர் சிரேஸ்ட விரிவுரையாளர் சாந்தினி அருளானந்தம்,
பேராதனை பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ஜே.ஜெயதீஸ்வரன்,
யாழ் பல்கலைக்கழக தொல்லியல்துறை விரிவுரையாளர்களான சிவரூபி சஜிதரன் மற்றும் தி.துளசிகா,
உதவி விரிவுரையாளர்களான திருச்செல்வம்,
யாழ்ப்பாணம் தொல்லியல் திணைக்கள அழ்வாய்வுப் பொறுப்பதிகாரி திரு.வி.மணிமாறன்,
யாழ்ப்பாண கோட்டையின் நிலைய பொறுப்பதிகாரி திரு.பா.கபிலன்,
யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் பொருளாளரும் யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட பதிவாளருமான இ.ரமேஷ் உறுப்பினரான வ.பார்த்திபன்,
முன்னாள் தவிசாளர் திரு.ஜெபநேசன் தொல்லியல் பட்டதாரி க.கிரிகரன்,
ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்த்துறை மாணவர்கள் சமூக நலன்விரும்பிகள் எனப் பலரும் பங்குகொண்டனர்.
மேலும் இவர்களுடன் தென்னிலங்கையை சேர்ந்த தென்னிலங்கை தொல்லியல்துறை பேராசிரியரான நிமல் பெரேரா,
யாழ் தொல்லியல் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.