வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

யாழில் குப்பையோடு வீசப்பட்ட 42 பவுண் நகைகள்!!!


tamil news: யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப்பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் குப்பையோடு குப்பையாக தவறுதலாக போடப்பட்ட சம்பவம் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை(23.06.2024) காவற்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

போத்தலொன்றினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 42 பவுண் தங்கநகைகள் தவறுதலாக கழிவுகள் வைக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்ட நிலையில், கழிவகற்றும் வாகனம் ஊடாக சாவகச்சேரியிலுள்ள குப்பை மேட்டினை வந்தடைந்துள்ளது.


இந்நிலையில் தமது நகைகள் தவறுதலாக குப்பையோடு போடப்பட்டதனை உணர்ந்த உரிமையாளர் இது தொடர்பாக சாவகச்சேரிப் காவற்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.


இது தொடர்பாக சாவகச்சேரி காவற்துறை சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து விசாரணை நடத்தியபோதிலும் இதுவரை காணாமற்போன நகைகள் தொடர்பாக எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என நாவற்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதேபோன்று கடந்த 1 வருடத்திற்கு முன்னராகவும் சாவகச்சேரியில் சம்பவம் நடந்தநிலையில் சாவகச்சேரி நகரசபையின் ஊழியர்கள் தேடுதல் நடத்தி தவறுதலாக குப்பைமேட்டை வந்தடைந்த 18 பவுண் நகை களை மீட்டு உரிமையாளரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.