புதிய பிரதமர் ஆட்சியில்: ஜம்மு காஸ்மீரில் 9 பேர் பலி!
tamil news: ஜம்மு காஸ்மீரில் பக்தர்கள் சிலர் பயணித்த பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவமானது ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரியாசியில் நேற்று முன்தினம்(09.06.2024)மாலை நேரத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பக்தர்களுடன் ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, பேருந்து கட்டுப்பட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தாக்குதலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பிரதேச மக்களுடன் ஒன்றிணைந்து காயமடைந்தவர்களை மீட்பு வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளனர்.