தேர்தலில் போட்டியிட நான் தயார்! நாமல்
tamil news: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பொருத்தமான வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாவிட்டால், தேர்தலில் போட்டியிட தான் தயார் என மகிந்தராஜபக்ஷவின் வாரிசு நாமல் ராஜபக்ஷ செயற்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
கடந்த 07ம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பாக கட்சியின் உத்தியோகபூர்வ உடன்பாடு எட்டப்படவும் இல்லை, எவரும் எதிர்த்ததாகவும் தெரிவிக்கப்படவில்லை.
அக்கட்சியின் தேசிய அமைப்பாளராக ரோஹித அபேகுணவர்தனவின் பெயரையும் நாமல் ராஜபக்ச முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் ராஜபக்சவின் உள்நோக்கம் குறித்து செயற்குழு உறுப்பினர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்