மாகாண பாடசாலைகளின் செயற்பாடு குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!
tamil news: நாடளாவியரீதியில நிலவுகின்ற அனர்த்த நிலை காரணமாக மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கீழ் உள்ள மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை(04.06.2024) விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதாவது,
சப்ரகமுவ மாகாணத்தில்
இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்கள்,
தென் மாகாணத்தில்
காலி மாவட்டம், மாத்தறை மாவட்டங்கள்,
மற்றும் மேல் மாகாணத்தில்
களுத்துறை மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அனைத்து பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு மாத்திரமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
மேற்குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகள் தவிர்ந்த நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை(04.06.2024) வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.