ஹஜ் யாத்திரை: அக்கரைப்பற்று நபர் உயிரிழப்பு
tamil news: ஹஜ் யாத்திரைக்குச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த நபரொருவர் அதிக வெப்பத்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக ஜெட்டாவில் உள்ள இலங்கை துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.
அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த மர்ஹூம் அல்-ஹாஜ் ஆதம் லெப்பை அப்துல் கஃபூர்(வயது 68) என்பவர் ஹஜ் யாத்திரைக்குச் சென்ற நிலையில் மக்காவில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
மக்காவில் உள்ள அப்துல் அஜீஸ் வைத்தியசாலையில் இவரின் ஜனாஸா வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்