காணாமற்போன மாணவி சடலமாக மீட்பு! அதிர்ச்சியில் உறகள்
tamil news: கண்டி ரெலுகேஸ் இல.2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி காணாமற்போயிருந்த நிலையில் இன்று(09.06.2024) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை(07.06.2024) முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே அம்மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது மாணவியை யாரும் கடத்தவில்லை என தெரியவந்துள்ளது.
அத்துடன் மாணவி காணாமற்போன விடயம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை காவல்நிலையத்தில் அவர்களது குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசேதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்