யாழிலிருந்து போன பேரூந்து மீது தாக்குதல்! சாரதி படுகாயம்
tamil news: நேற்றைய தினம்(04.06.2024) இலங்கை போக்குவரத்து சபை வவுனியாவிற்குரிய ND-9925 இலக்க பேரூந்து யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று சென்று கொண்டிருந்தபோது மாலை 5.25 மணியளவில் வெலிகந்த எனும் இடத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளானது.
குறித்த பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் பேரூந்தை நோக்கி கல்லால் எறிந்துள்ளார்கள்.
இதன்போது பேரூந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சாரதியின் நெற்றியில் பயங்கரமாக அடிபட்டுள்ளது.
இதனையடுத்து சாரதி உடனடியாக வெலிகந்த அரச வைத்தியசாலையில் கொண்டுசெல்லப்பட்டு நெற்றியில் 12 தையல் போடப்பட்டு பொலன்னறுவை அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் சாரதி பேரூந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் பாதுகாப்பாக பேரூந்தை நிறுத்தி காப்பாற்றியுள்ளது.
மேலும் தனியார் பேரூந்துடன் ஏற்பட்ட நேரபிரச்சினை காரணமாகவே இந்த செயல் நடைபெற்றுள்ளதாக தற்சமயம் தெரியவருகின்றது.