வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

இலங்கை தேர்தல்: இதுவரை 12 வேட்பாளர்கள்!


tamil news: இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 21 அன்று இடம்பெறும் என உத்தியோகபூர்வ அறிவித்தல் வந்தநிலையில் தற்போதுவரை 12 வேட்பாளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, மௌபிம ஜனதா கட்சியின் தலைவரான தொழிலதிபர் திலித் ஜயவீர, தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரதன தேரர் ஆகியோர் நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.


இந்நிலையில் வடகிழக்கு பிராந்தியத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் தமிழ் பொது வேட்பாளரையும், முன்னிலை சோஷலிசக் கட்சியும் டே;பாளர்களை நிறுத்துகின்றன.

இவ்வாறான சூழலில் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் முன்வைக்கப்படும் எனவும், இதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சூடு பிடிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



இராஜேந்திரன் ஆதீஷன், 2020 முதல் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார்.

தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.