புதிதாக 14 துறைகளுக்கு அரசு வரி!!!
tamil news: இதுவரை காலம் வரி விதிக்கப்படாமலிருந்த 14 துறைகளுக்கு புதிதாக வரி விதிக்க அரசு தீர்மானித்துள்ளதாக நிதி மற்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதாவது கேகாலையில் செய்தியாளர்களிடம் பேசிய இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,
பெரிய கல்வி நிறுவனங்கள், தனியார் பள்ளிக்கூடங்கள், தனியார் மருத்துவ சேவைகள், பொறியியல் நிறுவனங்கள் மற்றும் கணக்கெடுப்பு சேவைகள் ஆகிய முக்கிய துறைகள் உட்பட சுமார் 14 தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளுக்கு இவ்வாறு வரிவிதிக்கப்படவுள்ளதாக கூறினார்.
இதனையடுத்து குறித்த துறைகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் வருமானம் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் வரி செலுத்துவதில் எவருக்கும் விலக்கு அளிக்கப்படமாட்டாது எனவும்,
குறிப்பிடப்பட்டுள்ள 14 துறைகளும் வரி செலுத்துவதற்கு பதிவு செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.