1.5 மில்லியன் லஞ்சம் பெற்ற அமைச்சரின் தனிச்செயலாளரும், செயற்பாட்டாளரும் கைது!
tamil news: இராஜாங்க அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் ஒருவரும் சுமார் 1.5 மில்லியன் லஞ்சம் பெற்றதாக இலஞ்ச ஊழல்தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதாவது,
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின்(GSMB) அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக, முறைப்பாட்டாளரின் மணலகழ்வுத் தொழிலுக்கு உதவுவதற்காக இருவரும் லஞ்சம் கேட்டதாக பறிதொரு செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறாக இராஜாங்க அமைச்சரின் செயலாளரும், அரசியல் செயற்பாட்டாளரும் இலஞ்சம் பெற்றநிலையில் மட்டக்களப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
GSMB அனுமதி கோரியிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த வர்த்தகர் செய்த முறைப்பாட்டையடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த அரச அமைச்சரின் செயலாளரும், அரசியல் செயற்பாட்டாளரும் மட்டக்களப்பில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.