வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

பாதுகாக்கப்பட்ட பகுதி ஐ.நா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்! 16 பேர் பலி


tamil news: முற்றுகையிடப்பட்ட காசாப்பகுதியை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கிவரும் நிலையில்,

இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் அளித்துவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.


நேற்றையதினம்(06.07.2024) வெளியிடப்பட்ட அறிக்கையில், மத்திய காசாவின் நுசிராத் அகதிகள் முகாமிலுள்ள அல்-ஜௌனி பள்ளி மீதான தாக்குதலில் 75 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.


அது,

"பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான இந்த தொடர்ச்சியான குற்றங்கள் மற்றும் படுகொலைகளை செய்ததற்காக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நாங்கள் கண்டிக்கிறோம்"

என கூறியது.


பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நாவினால்(UNRWA) நடத்தப்படும் குறித்த பள்ளி, அக்டோபர் தொடக்கத்தில் காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய இராணுவத்தால் குண்டுவீசப்பட்ட சமீபத்திய பள்ளியாகும்.


மேலும் அக்டோபர் 7 முதல் காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 38,098 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் முற்றுகையிடப்பட்ட என்கிளேவ் உணவு, தண்ணீர், மருந்து மற்றும் பிற மனிதாபிமான பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.