செப்டெம்பர் 21 இலங்கை ஜளாதிபதி தேர்தல்: அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலைப்பாடு!
tamil news: இலங்கை ஜனாதிபதித் தேர்தல் எதிர்வருகின்ற 21.09.2024 அன்று இடம்பெறவுள்ளதாகவும், வேட்பு மனுத்தாக்கல் ஓகஸ்ட் 15 முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என உத்தியோகபூர்வ அறிவித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகளின், பிரமுகர்களின் நிலைப்பாடுகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.
அந்தவகையில்,
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இவரைப்போன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குகின்றார்.
மேலும் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தன்னுடைய உத்தியோகபூர்வ X கணக்கில்,
"76 ஆண்டுகளாக எங்களை திவால் நிலைக்கு .இட்டுச் சென்ற ஒரு திறமையற்ற அரசியல் குழுவால் நாங்கள் வழிநடத்தப்பட்டுள்ளோம்.
இலங்கை முன்னேறவேண்டுமானால் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்.
வருமானத்தை அதிகரிக்க நமது இயற்கை வளங்களைப் பயன்படுத்தவேண்டும்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக இது எனது முறையான மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்பு"
என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் வடகிழக்கு பிராந்தியத்தில் தமிழ் பொது வேட்பாளர் குறித்து தமிழ்த்தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவற்றிற்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்iகையொன்று கடந்த 22ம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையில் தமிழ் மக்கள் பொதுச்சபை சார்பில்,
அரசியல், சமூக செயற்பாட்டாளரான த. வசந்தராஜா,
சமூக விஞ்ஙான ஆய்வு மையத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம்,
அரசியற்துறை பேராசிரியரான கே.ரி. கணேசலிங்கம்,
அரசியல், சமூக செயற்பாட்டாளர்களான செல்வின் இரேனியஸ் மற்றும் ராசலிங்கம் விக்னேஸ்வரன்,
அரசியல் விழர்சகர்களான ஏ. ஜதீந்திரா மற்றும் ம. நிலாந்தன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் சார்பில்,
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி;வி. விக்னேஸ்வரன்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,
தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர் நல்லதம்பி சிறீகாந்தா,
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன்,
தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் மற்றும்
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் ஆகிளோர் கைச்சாத்திட்டனர்.
இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கு அமெரிக்க தூதுவர் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.