வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

விடத்தல்தீவு இயற்கை சரணாலயத்திலிருந்து 400 ஏக்கர் விடுவிப்பு. மக்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்படவில்லை!!!


tamil news: மன்னார் விடத்தல்தீவுப் பகுதியில் பாதுகாக்கப்பட்டிருந்த இயற்கைச் சரணாலயப் பகுதியின் 400 ஏக்கர் பரப்பானது அரசியல் நலன்களுக்காக மிக அவசரமாக விடுவிக்கப்படுவதாகவும்,
அது தொடர்பில் மக்களுக்கு தகுந்த தெளிவூட்டல் வழங்கப்படவில்லையெனவும்,
வவுனியாப் பல்கலைக்கழக விலங்கியல் கற்கைத்துறைப் பேராசிரியரும் சூழலியலாளருமான கலாநிதி. விஜயமோகன் யாழ்ப்பாணத்தில் 14.07.2024 அன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
 
2016ம் ஆண்டு விடத்தல்தீவு கடலோரப் பகுதியினை பாதுகாக்கப்பட்ட இயற்கைச் சரணாலயமாக அறிவித்து,
அதிலிருந்து 400 ஏக்கர் பகுதியை விடுவிப்பதாக கடந்த மே மாதம் 5ம் திகதி வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு  பவித்திரா வன்னியாராச்சியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பேராசிரியர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த பிரதேசம் பாதுகாக்கப்பட்ட இயற்கைச் சரணாலயப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட போதும்,
அது விடுவிக்கப்பட்ட போதும் அப் பகுதி தொடர்பான தெளிவூட்டல்கள் மக்களிற்கு வழங்கப்படவில்லை எனவும்,
தற்போது உடனடியாக அப் பகுதியினை விடுவிப்பதன் பின்புலத்தில் அரசியல் நோக்கங்கள் அதிகளவில் காணப்படலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் குறிப்பிட்டார்.
 
மேலும் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் குறித்த பிரதேசம் வெடிதல்தீவு என பெயரிடப்பட்டுள்ளமை குறித்த பிரதேசத்தை பிறிதொரு பிரதேசமாகக் காண்பித்து அரசியல் இலாபங்களை ஈட்டிக்கொள்ளும் பிறிதொரு முயற்சியாகவும் இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.



கிரிஜா அருள்பிரகாசம், 2019 முதல் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார்.

பால்நிலை, உள்நாட்டு அரசியல் மற்றும் கலாச்சாரம் சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கல்வித்தகைமையாக Bachelor of Arts honors in Media Studies ஆகியவற்றை கொண்டுள்ளார்.