இலங்கையில் போதை: மது நாளொன்றிற்கு 69 கோடிகளுக்கு விற்பனை!!!
tamil news: இலங்கையில் ஒரு நாளில் மட்டும் சுமார் 69 கோடி ரூபாய்களுக்கு மதுசாரம்(51 கோடி) அடங்கலாக பியர்(18 கோடி) ஆகியவற்றின் விற்பனை இடம்பெறுவதாக இலங்கை மதுசார மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்(ADIC) கடந்த 11.07.2024 அன்று தெரிவித்துள்ளது.
11.07.2024 அன்று நல்லூர் பிரதேச சபையினது மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வின் போதே அவர்கள் இதனை தெரிவித்திருந்தார்கள்.
தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில்,
இலங்கையில் ஆண்டொன்றிற்கு மதுப்பாவனையால் 165 மில்லியன் இலங்கை ரூபாய்கள் வருமானம் கிடைக்கப் பெறுகின்றது.
ஆனால் இதனால் ஏற்படும் சுகாதாரச் செலவுகள் மட்டும் சுமார் 237 மில்லியன் இலங்கை ரூபாய்கள் என கூறினர்.
அதுமட்டுமன்றி மதுப்பாவனையால் ஒவ்வொரு நாளும் சுமார் 40 பேர் மரணமடைவதாகவும், சட்டவிரோதமான முறையில் 10 விதமான கசிப்புகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இலங்கை மதுசார மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தகவல் வழங்கியுள்ளது.
மேலும்,
இலங்கையில் மொத்த சனத்தொகையில் மதுப்பாவனையிலுள்ள ஆண்கள் 35% ஆகவும், பெண்கள் 1% ஆகவும் காணப்படுகின்ற நிலையில்,
சிகரெட் பாவனை 24% காணப்படுகிறது.
மேலும் இலங்கையின் வரிவருமானத்தில் 9% மட்டுமே மதுசார நிறுவனங்களினால் இலங்கைக்கு வரி வருமானமாக கிடைக்கப் பெறுகின்ற நிலையில்,
2023ம் ஆண்டு ஏறபட்ட விலையேற்றத்தினால் 11.6 மில்லியன் ரூபா வருமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மதுப்பாவனை குறைவடைந்துள்ளதாக கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்