வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

யுவதி படுகொலை: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி, காதலன் உட்பட 7 பேர் கைது!!!

Published from Blogger Prime Android App

tamil news: திருகோணமலை, மூதூர் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியின் காதலனை பிரதான சந்தேக நபராக மூதூர் காவற்துறை கைது செய்துள்ளனர்.


சேருவில காவற்துறை பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி(வயது 25) என்ற யுவதி காணாமற்போயிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை(06.07.2024) பாழடைந்த கிணறு ஒன்றில் கல்லோடு கட்டிபோட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.


மீட்கப்பட்ட யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோது தலைப்பகுதி தாக்கப்பட்டு மண்டையோடு உடைந்திருந்ததாகவும், தலையின் பிற்பகுதியில் பாரிய துளை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் இன்றையதினம்(08.07.2024) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை நாளை செவ்வாய்கிழமை வரை காவற்துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை(05.07.2024) 6 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு மறுநாள்(06.07.2024) மூதூர் நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.


இதன் பின்னணியில் பிரதான சந்தேக நபரான படுகொலை செய்யப்பட்ட யுவதியின் காதலன் நேற்று(07.07.2024) மூதூர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதையடுத்து குறித்த கொலை தொடர்பில் யுவதியின் காதலன், காலனின் தந்தை, சகோதரி, அவரது வீட்டில் வேலை செய்தவர் மற்றும் JCB வாகன சாரதி இருவருமாக மொத்தம் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறை,

காதலனின் வீட்டிலிருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இரும்புக்குழாய் உட்பட சில சான்றுப் பொருட்களையும் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.