நல்லூர் பிரதேச சபையில் போதை குறித்த கருத்தமர்வு - ADIC
Event: இன்றையதினம்(11.07.2014) யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் ஊடகவியலாளர்களுக்கான போதை தொடர்பான கருத்தமர்வினை இலங்கை மதுசார மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்(ADIC) நடாத்தியுள்ளது.
இதன்போது குறித்த பணியகத்தின் 2 வளவாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25 ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது,
இலங்கையில் மதுப்பாவனையின் வருமானம் மற்றும் செலவு,
மதுப்பாவனையில் ஆண்கள், பெண்களின் சதவீதங்கள்,
இலங்கையில் கசிப்பு உற்பத்தி,
2023ம் ஆண்டு விலையேற்றத்தின் பின்னரான மதுப்பாவனை நிலைமை,
போதை சார்ந்த நிறுவனங்கள் தமது உற்பத்திகளை அதிகரிப்பதற்கு பயன்படுத்தும் உத்திகள்,
போதை சார்ந்த நிறுவனங்கள் இளைஞர் மத்தியில் பாவனையை அதிகரிக்கச் செய்யும் உத்திகள்,
போதைப்பொருட்கள் சார்ந்து உருவாக்கப்பட்ட போலியான நமபிக்கைகள் ஆகிய தலைப்பைகளின் கீழ் கருத்தமர்வு இடம்பெற்றது.
மேலும் போதைப்பொருட் பாவனை குறித்த புள்ளிவிவரங்களுடன் இந்த செயலமர்வு அமைந்தமை சிறப்பம்சமாகும்.
Labels:
சமூக நிகழ்வுகள்