வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தை கவனிக்க முடியவில்லை!!! தஞ்சம் கோரிய ஈழத்துக்குடும்பம்


tamil news: இந்த வாரத்தில் ஈழத்தைச் சேர்ந்த தமிழ்த் தாயும், அவரது 2 குழந்தைகளும் தலைமன்னாரிலிருந்து கடல் கடந்து இந்தியாவின் தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.


அதாவது யோகவள்p(வயது 34), அவரது குழந்தைகளான அனுஜா(வயது 8) மற்றும் மிஷால்(வயது 5) ஆகியோர் இலங்கை ரூபாயில் சுமார் 275,000 செலுத்தி படகில் இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ளனர்.


இதனையடுத்து தனுஷ்கோடியில் இந்திய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


அதன்போது வள்ளி அளித்த தகவலின்படி,

குறித்த பெண் விருதுநகர் மாவட்டம், விசாகப்பட்டினத்திலுள்ள வெம்பக்கோட்டை அகதிகள் முகாமில் பிறந்தவர்.


ஆனால் திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை திரும்பியுள்ளார்.


இருப்பினும், அவரது திருமணம் பிரிந்தநிலையில், அவர் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்திருக்கின்றார்.


இந்நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக, தனது குடும்பத்தை கவனிக்கமுடியவில்லை என்பதால் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைவதாக அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.


மேலும் வெம்பக்கோட்டை முகாமில் தனது தாயுடன் இனி வாழ விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


தீவிர விசாரணையைத் தொடர்ந்து, 3 பேரும் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


இவ்வாறாக பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகம் வந்துள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 293 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் பல்லாயிரக்கணக்கான ஈழ அகதிகள் தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில்,

பெரும்பாலும் கடினமான சூழ்நிலைகளில் மற்றும் எந்த ஆதரவும் இல்லாமல் உள்ளனர்.


ஈழத்திலிருந்து வந்த பல அகதிகள் இலங்கை அரசின் அடக்குமுறையில் இருந்து வெளியேறி சுமார் 3 தசாப்தங்களாக தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.


ஆனாலும்  இந்திய அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கின்றது.




இராஜேந்திரன் ஆதீஷன், 2020 முதல் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார்.

தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.