வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

கொக்குதொடுவாய் புதைகுழி: மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணியில் தமிழீழ பெண் போராளிகளின் எச்சங்கள்!


tamil news: இலங்கை அரசின் பல மாத தாமதத்திற்குப் பின்னர், கொக்குத்தொடுவாய் பாரிய மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இந்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதன்போது தமிழீழ 3 பெண் போராளிகளின் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


அதுமட்டுமன்றி மேலும் அடையாங்காணப்படாத எலும்புக்கூடுகள் 4 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


அகழ்வின் இரண்டு கட்டங்களிலும் இதுவரை மொத்தம் 40 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



அதாவது,

இலங்கை அரசு ஆரம்பத்தில் இந்த பாரிய புதைகுழி பற்றிய ஆராய்ச்சிக்கான நிதியை மறுத்துவிட்டது.


ஆனால் அதில் சமீபத்திய முன்னேற்றங்கள் இந்த மனிதப் புதைகுழியின் வரலாற்றைக் கண்டறியும் முயற்சிகளை மீண்டும் தூண்டியுள்ளன.


அகழ்வாராய்ச்சியை மீண்டும் தொடங்குவதற்கான முடிவு நீண்டகால தாமதங்கள் மற்றும் நிதி உதவிக்கான தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகு வந்திருந்தது.


இந்த வழக்கின் உண்மைகளை வெளிக்கொணருவதில் இலங்கை அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததன் மூலம் வேண்டுமென்றே நிதியை நிறுத்தி வைத்தமையானது, இது வழக்கு தொடர்பான 2 விசாரணைகளையும் ஒத்திவைக்க வழிவகுத்தது.


இந்த பின்னடைவுக்கு மத்தியிலும் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ, விசேட தடயவியல் நிபுணர் கனகசபாபதி வாசுதேவ உள்ளிட்ட சட்ட வைத்திய நிபுணர்கள் தொடர்ந்தும் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.



அதுமட்டுமன்றி அகழ்வுப் பணியின் போது முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் அவர்களும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார்.


மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் அகழ்வாராய்ச்சியில் தமிழீழ விடுதலைப் போராளிகளான விடுதலைப் புலிகள் அணிந்திருந்த ஆயுதங்கள், குறிச்சொற்கள், சீருடைகளின் எச்சங்கள் மற்றும் நீரை சுத்திகரிக்க வடிவமைக்கப்பட்ட சாதனம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு முக்கிய ஆதாரங்களாக சேகரிக்கப்பட்டுள்ளன.


ஆனால் இந்த மனிதப் புதைகுழியில் எத்தனை உடல்கள் உள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




இராஜேந்திரன் ஆதீஷன், 2020 முதல் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார்.

தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.