நெடுந்தீவு தேசிய பூங்கா வர்த்தமானி அறிவித்தல் சூழலியல் மதிப்பீட்டாய்வறறது!!!
tamil news: யாழ் மாவட்டத்திலுள்ள மிகப்பெரிய தீவாகிய நெடுந்தீவின் 45% நிலப்பரப்பை 2015 இல் வெளிவந்த தேசியபூங்காவாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தல் சூழலியல் மதிப்பீட்டாய்வற்றது என வவுனியா பல்கலைக்கழக பேராசிரியரும், சூழலியலாளருமான டாக்டர் S. விஜயமோகன் அவர்கள் இன்று(14.07.2024) தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அதாவது,
தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்நுழைய அனுமதி அவசியம் எனவும்,
அனுமதியின்றி உள்நுழைந்தால் கைதுசெய்யமுடியும் எனவும் கூறினார்.
அவ்வாறாக இலங்கை அரசு 2015ம் ஆண்டு ஜுன் மாதம் 22ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நெடுந்தீவின் சுமார் 45% நிலப்பரப்பை தேசியபூங்காவாக அறிவித்துள்ளது.
அதன்படி நெடுந்தீவின் நிலப்பரப்பில் வாழும் மக்களை கவனத்திற் கொள்ளாமலும், சரியான சூழலியல் மதிப்பீட்டாய்வு(EAS) மேற்கொள்ளாமலும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளது.
இதனால் நெடுந்தீவிற்குள் பொதுமக்கள் பிரவேசித்தாலே கைதுசெய்ய முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்று மன்னார் விடத்தல் தீவுப்பகுதி, மடுப்பிரதேசம், சுண்டிக்குளம் பகுதிகளும் முறையற்ற வகையில் தேசியபூங்காவாக அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.