பரந்தன் இரசாயன தொழிற்சாலையை இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார்!
tamil news: வடபிராந்தியத்தில் முன்னெடுக்கவுள்ள 4 அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆய்வு நோக்கில் முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம வடக்கிற்கான விஜயமொன்றை இன்றையதினம்(15.07.2024) மேற்கொண்டிருந்தார்.
இதன்போது மாலை 3.00 மணியளவில் இலங்கையரசின் 30 ஆண்டுகால இனவழிப்பு நடவடிக்கையினால் அழிவடைந்து, நீண்ட காலமாக புணர்நிர்மாண பணிகள் எதுவும் செய்யப்படாத நிலையிலுள்ள பரந்தன் இரசாயன தொழிற்சாலை மற்றும் தொழிற்சாலைக்கு சொந்தமான வயல் நிலங்களை முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார்.
சுமார் 230 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பெற்ற குறித்த தொழிற்சாலையினை,
விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் உருவாக்கும் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யும் நோக்கில் குறித்த விஜயம் அமைந்திருந்தது.
மேலும் இராஜாங்க அமைச்சருடன் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், அமைச்சின் அதிகாரிகள், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன், கிராம சேவகர், கண்டாவளை பிரதேச செயலக காணி பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்