கிளிநொச்சியில் பரசூட் முறையில் விதைக்கப்பட்ட நெல்! இன்று அறுவடை விழா
tamil news: கிளிநொச்சி செல்வாநகர் விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள கந்தன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்ச்செய்கையில் 'பரசூட் முறை' நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா இன்று(25.07.2024) பிற்பகல் 2.00மணிக்கு இடம்பெற்றது.
குறித்த சிறப்பு நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி கலந்துகொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் பரந்தன் விவசாய கல்லூரியின் விரிவுரையாளர் ம.ரஜீதன், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.
Labels:
சமூக நிகழ்வுகள்