வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

உலகளாவிய தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு: நடந்ததும், இலங்கையின் நிலையும்


tamil news: உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்ட இணையப் பாதுகாப்பு நிறுவனமான Crowd Strike, வெள்ளிக்கிழமை(19.07.2024) குறிப்பிட்ட மென்பொருள் ஒன்றின் குறைபாட்டினை புதுப்பித்தலின்போது  ஏற்பட்ட சிக்கல் காரணமாக விமான நிலையங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், ஊடகங்கள் மற்றும் வணிகங்கள் உலகளவில் நிறுத்தப்படும் பெரும் IT செயலிழப்பை ஏற்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளது.


சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று(19.07.2024) வெள்ளிக்கிழமை அதிகாலையில் உலகெங்கிலும் இருந்து செயலிழப்புகள் பற்றிய அறிக்கைகள் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவிலுள்ள ஸ்கை நியூஸ் ஊடகம் பல மணிநேரங்களுக்கு தன்னுடைய ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது.


இருப்பினும், Crowd Strike இன் தலைமைநிர்வாக அதிகாரி பிறிதொரு செய்தி நிறுவனத்திடம்,

உலகளாவிய செயலிழப்பை ஏற்படுத்திய IT சிக்கல் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்கான தீர்வு வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


மேலும் Crowd Strike நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு புதுப்பிப்புகளுக்காக அதன் ஆதரவு போர்ட்டலைப் பார்க்கவும், மேலும் Crowd Strike பிரதிநிதிகளுடன் 'அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம்' தொடர்ந்து தொடர்புகொள்ள அதன் சேவைகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


இந்நிலையில் இலங்கையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதன் இணைய முன்பதிவு சேவைகள் 08:30 GMT(உள்ளூர் நேரப்படி பிற்பகல் 02.00) இற்கு மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களின் உலகளாவிய செயலிழப்பைத் தொடர்ந்து, விமானத்தின் ஆன்லைன் முன்பதிவு சேவைகளை பாதித்துள்ளது.


இதனைத் தொடர்ந்து 

"இது எங்கள் சில பயணிகளின் அனுபவத்தை பாதித்திருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மேலும் ஏதேனும் அசௌகரியத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்"

என்று குறித்த விமான நிறுவனம் ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மேலும் ஏற்கனவே உள்ள அல்லது புதிய முன்பதிவுகளுக்கு மேலதிய உதவிக்கு, பயணிகள் உலகளாவிய தொடர்பு மையத்தை 1094 19733 1979 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு;ளமை குறிப்பிடத்தக்கது.




இராஜேந்திரன் ஆதீஷன், 2020 முதல் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார்.

தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.