அமெரிக்க அதிபர் தேர்தல்: போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகல்!!!
tamil news: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன்,
"எனது கட்சி மற்றும் நாட்டிற்கு நல்லது"
என்று கூறி மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை திரும்பப்பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலுக்கு 4 மாதங்களே உள்ளநிலையில், இந்த விலகலானது வெள்ளை மாளிகைக்கான போட்டியை உயர்த்தியிருக்கின்றது.
ஜூன் மாத இறுதியில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான விவாத நிகழ்ச்சியில் பின்னடைவை சந்தித்தநிலையில், சக ஜனநாயகக் கட்சியினரிடமிருந்து வந்த கடுமையான அழுத்தங்களைத் தொடர்ந்து அவ்வாறு நடந்துள்ளது.
மேலும் அவர் தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்ட கடிதத்தில்,
"ஜனாதிபதியாக பணியாற்றுவது தனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும்."
என குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.
Labels:
வெளிநாட்டு செய்திகள்