வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

திருடப்பட்ட கோவில் நகைகள் மீட்பு! பூசாரி கைது!


tamil news: யாழ்ப்பாணம், புளியங்கூடல் முத்துவிநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 28 வயதான உதவிக் குருக்கள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


அதாவது,

ஆலயத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபா பணம் என்பன காணாமற்போயிருந்தன.


இது தொடர்பில் ஊர்காவற்றுறை காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


முறைப்பாட்டின் பிரகாரம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தநிலையில்,

ஆலயத்தின் பெட்டகம் உடைக்கப்படாது போலிச் சாவிகளைகளைப் பயன்படுத்தி நகைகள், பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது.


அதனை தொடர்ந்து ஆலயமகோற்சவக் காலத்தில் ஆலயத்தில் பணியாற்றிய 28 வயதான உதவிக்குருக்களை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 40 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன்,

ஏனைய நகைகள் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


சந்தேகநபரை தொடர்ந்தும் காவற்துறை நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


அதேவேளை ஆலயத்தில் நகைகள் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டு நீண்ட காலமாகியும் குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என கடந்த வாரம் பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.


இந்நிலையில் சந்தேநபர் கைது செய்யப்பட்டு, கோயில் நகைகள் ஒரு தொகுதி மீட்ட்கப்பட்டதையடுத்து பிரதேச மக்கள் வெடி கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.




இராஜேந்திரன் ஆதீஷன், 2020 முதல் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார்.

தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.