முல்லைத்தீவில் நெல்லை வீதியில் உலரவிட்ட விவசாயி மீது துப்பாக்கிச் சூடு!
tamil news: முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடைசெய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல் காத்துக்கொண்டிருந்த விவசாயியும், கமக்கார அமைப்பின் செயலாளருமான ஒருவர் மீது இன்று(24.07.2024) அதிகாலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த கமக்கார அமைப்பின் செயலாளர் செல்லையா கிருஸ்ணராஜா(வயது 42) மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
இன்று(24.07.2024 ) துணுக்காய் பிரதேசத்தில் கல்விளான் பகுதியில் தனது நெல்லினை அறுவடை செய்து வீதியில் காயவைத்துவிட்டு இரவு காவல் காத்து வீதி ஓரமாக உறங்கிக்கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் அதிகாலை சுமார் 3.00 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மல்லாவி ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவுமனைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.