காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவிக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு அழைப்பு!!!
tamil news: மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அமலராஜ் அமலநாயகியை ஊவுஐனு மட்டக்களப்பு காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதாவது, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு தொடர்பான தற்போதைய விசாரணை அறிக்கையை பெறுவதற்கு எனக் காரணங்கூறி எதிர்வரும் ஜூலை 29ம் திகதி காலை 10 மணிக்கு மட்டக்களப்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு நேற்று முன்தினம்(26.07.2024) அழைப்புக் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
2009 இற்கு பிந்திய நிலையில் காணாமலாக்கப்பட்டோர் சார்ந்து தொழிற்படும் அமைப்புகளுக்கு அரச புலனாய்வுப்பிரிவுகளால் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்