முல்லைத்தீவில் இளம் குடும்பப் பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!!
tamil news: முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து இளம் 30 வயது குடும்பப் பெண் இன்று(29.07.2024) காலை சடலமாக மீட்கப்படுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த டெனிஸ்குமார் தெரினா(வயது 30) எனபவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடரிபில் மேலும் தெரியவருவதாவது,
சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண்ணை நேற்று(28.07.2024) இரவு தொடக்கம் காணவில்லையென பெண்ணின் குடும்பத்தார், கிராமத்தவர்கள் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்
இவ்வாறு எங்கு தேடியும் கிடைக்காத நிலையில்,
இன்று(29.07.2024) காலை வீட்டு கிணற்றுக்குள்ளிருந்து சடலமாக கிடப்பதனை அவதானித்த குடும்பத்தினர் காவற்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தெரினா திருமணமான பின்பு தன்னுடைய 5 வயது மகளுடன் கணவருடைய வீட்டில் மாமி, மாமனாருடன் வசித்து வந்ததாகவும்,
கணவர் புலம்பெயர் நாட்டில் வேலை செய்து வருவதாகவும் தெரியவருகின்றது.
இறப்பிற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விசாரணைகளை ஒட்டுசுட்டான் காவற்துறை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்