வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

பதவிக்காலம் முடிய முதல் தமிழருக்கு தீர்வு வேண்டும்! சுமந்திரன்


tamil news:

"ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 03 மாதங்களே உள்ளன.


இது முடிவதற்குள் தமிழ்த்தேசியப் பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்துவைக்க வேண்டும்."

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


அதாவது,

நேற்றையதினம்(02.07.2024) பாராளுமன்றத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுதாபம் தெரிவித்து உரையாற்றிய பின்னரே சுமந்திரன் எம்பி இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சுமந்திரன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

"சம்பந்தரின் மறைவு தொடர்பாக அனுதாபம் வெளியிட்டமைக்கு ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.


ஜனாதிபதி தனது உரையின்போது தாமும் சம்பந்தனும் ஒன்றாக பாராளுமன்றத்துக்கு வந்தமை தொடர்பில் குறிப்பிட்டார். 


சம்பந்தனின் ஆயுட்காலத்திலேயே தமிழ்த்தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் எனவும்,

துரதிஷ்டவசமாக அவர் இயற்கை எய்துவிட்டாரெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


எனவே, மீண்டும் மீண்டும் நாம், வலியுறுத்துவது என்னவென்றால் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர், இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.


இதை விநயமாக இந்த சபையில் கேட்டுக்கொள்கின்றேன்.


நாட்டு மக்கள் அனைவரும் திருப்தியடையும் வகையில் இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்."

என்று அவர் தெரிவித்தார்.