வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட நால்வர் கைது!
tamil news: வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் காவற்துறை மேற்கொண்ட விசேட சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறை நேற்று(19.07.2024) தெரிவித்தனர்.
அதாவது,
வவுனியா தலைமைக் காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இரவு விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது தேக்கவத்தைப் பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த நிலையில், அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.
மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்