காணாமற்போன யுவதி சடலமாக மீட்பு!!! தமிழர் பகுதியில் துயரம்
tamil news: திருகோணமலை மூதூர் காவற்துறை நிலையத்தில் காணாமற்போன யுவதி ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டை விசாரித்த காவற்துறை, சந்தேகத்துக்கிடமான கிணறு ஒன்றினை மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம் தஸ்னீம் பௌசான், திடீர் மரணவிசாரணை அதிகாரி ஆகியோர் முன்னிலையில் நேற்றையதினம்(05.07.2024) தோண்டிய நிலையில் அந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த குறித்த யுவதியும், கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த மே மாதம் யுவதி தன் காதலனுடன் மட்டக்களப்புக்கு சென்று வசித்து வந்தநிலையில் கடந்த மே மாதம் 31ம் திகதிக்குப் பின்னர் அவருடன் தொடர்பில்லாமல் போயிருந்த நிலையில், குறித்த இளைஞரும் தலைமறைவாகியுள்ளார்.
சேருவில காவற்துறை பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி(வயது 25) என்ற இளம்பெண்ணே இவ்வாறு காணாமற்போனதாக அவரது குடும்பத்தினரால் மூதூர் காவற்துறை நிலையத்தில் கடந்த முதலாம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கின் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் கிளிவெட்டியைச் சேர்ந்த இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதனடிப்படையில் கிளிவெட்டி கிராமத்தின் எல்லைப்புறத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றினை தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் வினோதினியின் சடலமும், அவரது கைப்பையும் நேற்றையதினம்(05.07.2024) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடரந்து அந்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் காவற்துறை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்